fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய மு க ஸ்டாலின்

திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலுக்காக பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்த தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் உள்ள அவர் வீட்டில் இருந்து தொடங்கினார்.

      ஏப்ரல் 18- ம் தேதி ஒரே கட்டமான தேர்தல் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் நடக்க இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தமிழகத்தில் நேற்று தொடங்கப்பட்டது. 18- ம் தேதி நடக்க இருக்கும் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

தேர்தலின் பிரசாரத்தை தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் தொடங்கினார்

     நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மதச்சார்ப்பற்ற வேட்பாளர்களையும், இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களையும் ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில்  தொடங்கியுள்ளார். பிரசாரத்தை அவரது வீட்டில் இருந்து நடந்து சென்று வாக்குகளை  சேகரித்து வந்தார். இதனை தொடர்ந்து நாகை சேர்ந்த திருவாரூர் தொகுதியின் பொதுக்கூட்டத்திலும் தஞ்சை தொகுதி தொண்டர்களிடம் வாக்கு சேகரித்து வந்துள்ளார். இவரின் இந்த பயணம் இன்று தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை தொடரும் என்று தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related posts

ஜெயசிறீயை எரித்துக் கொன்றவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும்!- பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

World News

8 இந்திய மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

World News

தமிழ்நாட்டில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

World News