fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

திருநங்கைகள் வசிக்க இடம் வாங்கி கொடுத்தார் லாரன்ஸ்

தமிழ் சினிமா திரைப்பட நடிகரான ராகாவா லாரன்ஸ் திருநங்கைகளுக்கு ஆதரவு கரம் நீட்டி வீடு கட்டித்தர நடிகர் நிலத்தை வழங்கியுள்ளார்.

     ஆதரவற்ற திருநங்கைகளுக்காக வீடு கட்டித்தர நடிகர் ராகவா லாரன்ஸ் மீஞ்சூரில் 1.25 கிரவுண்ட் நிலத்தை வழங்கியுள்ளார். ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் காமெடி கலந்த ஜாலியான பேய் படமாக வெளியாகி தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் காஞ்சனா சீரிஸ், முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றியடைந்தது.

திருநங்கைகள் வசிக்க இடம் வாங்கி கொடுத்தார் லாரன்ஸ்

     சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை தவிர்க்குமாறு சன் டிவி-யிடம் கேட்டுக் கொண்ட ராகவா லாரன்ஸ், இசை வெளியீட்டிற்கு செலவாகும் தொகையை ஆதரவற்ற திருநங்கைகளுக்கு உதவ ஏற்பாடு செய்துள்ளார். குடும்பத்தினரால் கைவிடப்பட்ட திருநங்கைகள் வசிக்கும் வகையில் வீடுகள் கட்டித்தர ராகவா லாரன்ஸ் எடுத்துள்ள இம்முயற்சிக்கு, மக்களும் உதவ வேண்டும் என
ராகவா லாரன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் யோகி பாபு

N N

கே.ஜி.எப்.2 படத்தில் இணைந்த சரண் சக்தி

N N

அசினின் கணவர் துவங்கியுள்ள பேட்டரி பைக் நிறுவனம்!!

N N