fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பிரம்மாண்ட அரங்கம் தளபதி 63 படத்திற்காக உருவாக்கம்

அட்லி இயக்கத்தில் ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இந்த படத்திற்காக பிரம்மாண்ட அரங்கம் உருவாக்கப்பட்டு வருகிறது.

     விஜய் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த படத்தை அட்லி இயக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷராப் வில்லனாக இணைகிறார். கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை பற்றி படக்குழுவினர் கூறியது.

பிரம்மாண்ட அரங்கம் தளபதி 63 படத்திற்காக உருவாக்கம்

     விஜய் நடிக்கும் படத்திற்கு வெறித்தனம் என்று பொய்யான தகவல் வந்துள்ளது. ஆனால் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவிலை என்றும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் கூறினார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், மிக பிரமாண்டமான முறையில் ஒரு கால்பந்து அரங்கம் போன்ற செட் அமைக்கப்படுகிறது.  தற்சமயம் விஜய் வெளிநாடு சென்றிருப்பதால் சென்னை திரும்பியதும், கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்பந்து அரங்க படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Related posts

ப்ரியங்கா சோப்ரா விவாகரத்து குறித்து வெளியான தகவல்

N N

மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் கார்த்திகா

N N

இனி இளமைத் தோற்றத்தில் நடிக்க மாட்டேன்- சூப்பர் ஸ்டார் திட்டவட்டம்!!

N N