fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் – லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் நடிகையாக இருப்பவர்.  தற்பொழுது சொல்வது எல்லாம் உண்மையில் பெருமையான நிலையில், அவர் இயக்கத்தில் உருவான ஆரோகணம், அம்மணி படத்தை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது நடித்து வரும் படம் ‘ஹவுஸ் ஓனர்’.  இப்படத்தை பற்றி அவர் கூறியது ‘இப்படத்தினை பற்றி கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை’ என கூறி இருக்கிறார்.  இதில் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவது மனதை நிறைய வைக்கிறது என்று கூறி இருக்கிறார்.

     ‘ஆடுகளம் ’படத்தில் நடித்து கிஷோர் இந்தப் படத்தில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். பிரபல நடிகையான விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இவரின் நடிப்பை பார்த்தவர், நடிப்பு கூட பரம்பரை சொத்துதான் என்று கூறுகிறார்கள்.

திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் - லட்சுமி ராமகிருஷ்ணன்

      ‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆன கிஷோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இதில் அம்மாவாக ஶ்ரீரஞ்சனி நடித்துள்ளார்.  நல்ல கதைக்கு திறமையான நடிகர்களை தேடிக்கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கை பிறக்கிறது என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

      இந்த படத்தில்இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் மதன் கார்க்கி, அனுராதா பாடல் வரிகளை இயற்றியுள்ளார்.  பாடல்களுக்கு உயிருட்டும் விதமாக சின்மயி, சத்யபிரகாஷ், பென்னி தயாள் ஆகியோர் பாடியுள்ளனர்.  ‘மகளிர் மட்டும்’ என்ற படத்தில் புகழ் பெற்ற புகழ் பிரேம் சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது.

Related posts

சிவகார்த்திகேனின் அயலான் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி !

TamilTwin India

தளபதி 64 இல் இணைந்துள்ள பிரபல செய்தி வாசிப்பாளர்!!!

N N

சேரனுக்கு சர்பிரைஸ் கொடுத்த சாக்சி

TamilTwin India