fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

அண்ணனுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும் குறளரசன்

நடிகர் சிலம்பரசனின் தம்பி மற்றும் டி. ஆர். ராஜேந்திரனின் மகனும் ஆகிய குறளரசன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  சமீபத்தில் தான் குறளரசன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் ஒரு இஸ்லாமிய பெண்ணை விரும்புவதாகவும் அதற்காகத்தான் மதம் மாறியதாகவும் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர்.  வருகிற ஏப்ரல் 26 – ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.  இது குறித்து குறளரசனிடம் கேட்டதற்கு,

அண்ணனுக்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும் குறளரசன்

      ஏப்ரல் 26 – ம் தேதி எனக்கு திருமணம் என்பது உண்மை அல்ல ஆனால் கூடிய விரைவில் நான் திருமணம் செய்து கொள்வேன்.  மேலும் அண்ணனிற்கு முன்பு திருமணம் செய்வதால் அதற்கு அடுத்து அனைவரின் கவனமும் அண்ணனின் மேல் விழும் அவருக்கும் வேறு வழி இருக்காது கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்.  மேலும் எனது திருமணத் தேதி விரைவில் வெளியாகும் என அவர் கூறி இருந்தார்.  நடிகர் சிலம்பரசன் நடித்த இது நம்ம ஆளு படத்தின் மூலம் குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகர் மோகன் லால் மீது வழக்கு, அதிர்ச்சியில் ரசிகர்கள் !

TamilTwin India

கார் மீது லாரி மோதி விபத்து, பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்!

TamilTwin India

லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து குத்தாட்டம் போடும் வடிவேலு! வைரல் வீடியோ

TamilTwin India