Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்எரிபொருள் தட்டுப்பாட்டினால் கழிவகற்றலை மேற்கொள்ள முடியாத நிலைமை!:நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் மதுசுதன்

எரிபொருள் தட்டுப்பாட்டினால் கழிவகற்றலை மேற்கொள்ள முடியாத நிலைமை!:நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் மதுசுதன்

இனிவரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் அனைத்து இடங்களுக்கும் எமது கழிவகற்றல் சேவைகளை வழங்குதல் கடினமாக இருக்கும். எனவே அதிகளவு கழிவுகள் சேரும் மிகவும் அத்தியாவசியமான இடங்களைத் தெரிவு செய்து அதற்கு முன்னுரிமை கொடுத்து கழிவகற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் குமாரசாமி மதுசுதன் தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை(04.7.2202) அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் கழிவு சேகரிக்கும் செயற்பாடுகள் தற்போது வழமை போல் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டிய அவர் எரிபொருள் தட்டுப்பட்டினால் கழிவகற்றலில் ஏற்படவுள்ள பிரச்சனைகளை எம் மக்கள் பொறுப்புடன் விளங்கிக்கொள்வார்கள் என நான் மிகவும் நம்புகிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular