கோண்டாவில் சந்திரசேகர விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம்(Photos)

யாழ்.கோண்டாவில் மேற்கு சந்திரசேகர விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வியாழக்கிழமை(05.5.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.

தொடர்ச்சியாகப் பன்னிரெண்டு தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-12 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு கைலாசவாகனத் திருவிழாவும், எதிர்வரும்-13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு-07 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 14 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-07 மணிக்கு சப்பரத் திருவிழாவும், 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-08 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 16 ஆம் திகதி முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும் என மேற்படி ஆலயத் தர்மகர்த்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார முறைப்படி இவ்வருட மஹோற்சவ காலங்களில் ஆலயத்தில் அன்னதானம் நடைபெறமாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)