யாழ்.கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த வரலட்சுமி விரத பூசை வழிபாடுகள் இன்று வெள்ளிக்கிழமை(05.8.2022) மாலை-4 மணியளவில் ஆரம்பமாகி நடைபெறும்.
இதன்போது அடியவர்களுக்கு வரலட்சுமி காப்பும் வழங்கப்படும்.
இதேவேளை, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு விளக்குப் பூசை செய்ய விரும்புபவர்கள் குத்துவிளக்கு, வாழை இலை, சிறிய செம்பு, குங்குமம், மஞ்சள் மா, தேங்காய் எண்ணெய், பூக்கள் என்பன கொண்டு வருமாறு கேட்கப்பட்டுள்ளது.
(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)