Tuesday, August 16, 2022
Homeஆன்மிகம்கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாளுக்கு ஞாயிறன்று கொடியேற்றம்(Photos)

கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாளுக்கு ஞாயிறன்று கொடியேற்றம்(Photos)

யாழ்.கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(03.7.2022) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 11 தினங்கள் இவ்வாலய மஹோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும்-5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை-6 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 11 ஆம் திகதி மாலை-6 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-6.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து தேர்த் திருவிழாவும், 13 ஆம் திகதி புதன்கிழமை காலை-8 மணிக்குத் தீர்த்த உற்சவமும், அன்றையதினம் மாலை-3.30 மணிக்கு வசந்தமண்டப் பூசையும், திருவூஞ்சலும் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்.

காலை, மாலை இடம்பெற உள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் விசேட உற்சவங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை உற்சவம் காலை-8.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகும். மாலை உற்சவம் மாலை-4.30 மணிக்குப் பூசை வழிபாடுகளுடனும் ஆரம்பமாகும் என மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மஹோற்சவ காலங்களில் தினமும் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular