கொக்குவில் கிழக்கு காளியம்பாள் வைகாசி விசாகப் பிரம்மோற்சவ மஹோற்சவம் ஆரம்பம்(Photos)

கொக்குவில் கிழக்கு காளியம்பாள் ஆலய வைகாசி விசாகப் பிரம்மோற்சவ மஹோற்சவம் நாளை திங்கட்கிழமை(02.5.2022) முற்பகல்-11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும்-15 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல்-12 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 14 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-07 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் திங்கட்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும் எனவும் மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் காலை உற்சவம் தினமும் காலை-08.30 மணிக்கும், மாலை உற்சவம் மாலை-05.30 மணிக்கு மூலஸ்தான பூசையுடனும் ஆரம்பமாகும் எனவும் ஆலய பரிபாலன சபையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்