ஊரடங்கு தளர்த்தப்பட வீட்டில் அடங்கிக் கிடந்த மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்துள்ளனர், அந்தவகையில் தமிழகத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல பயணிகள் நவம்பர் 20 ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டனர்.
அதிலும் கடந்தவாரம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என இரு நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வனப் பகுதியில் குவிந்து இருந்ததையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்து வனப்பகுதி அலுவலர்கள் அனைவரும் மக்களைக் கட்டுக்குள் வைக்க கடுமையாகப் போராடினர்.

இந்தநிலையில் தற்போது கொடைக்கானல் சுற்றுலாத் தலங்கானது மீண்டும் மூடப்பட்டுள்ளது, அதாவது தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நிவர் புயல் காரணமாக கடும் மழையானது வெளுத்து வாங்கி வருகின்றது.
இடைவிடாமல் 24 மணி நேரமும் பெய்யும் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கொடைக்கானலில் புயல் அச்சுறுத்தல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து சுற்றுலாத்தலங்களும் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.
அதிலும் பில்லர்ராக், மோயர்பாயிண்ட், பைன் மரச்சோலை, குணாகுகை, மன்னவனூர் சூழல்சுற்றுலா மையம் ஆகிய இடங்களுக்கு செல்ல தடைவிக்கப்பட்டுள்ளது.