fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உணவலங்காரம்

ஆரோக்கியத்தினை அள்ளித் தரும் கிவி – வாழைப்பழ சாலட்

Preparing kiwi banana salad

                நாம் அனைவரும் நம்முடைய அன்றாட வாழ்வில் பழங்களை உட்கொள்வதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.  பழங்களின் மூலம் நம் உடலுக்கு அதிக வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது.  நம் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய இரு பழங்களின் மூலம் செய்யக்கூடிய சாலட்டை எவ்வாறு செய்யலாம் என்பதை கீழே காணலாம்.

ஆரோக்கியத்தினை அள்ளித் தரும் கிவி – வாழைப்பழ சாலட்

கிவி – வாழைப்பழ சாலட் - kiwi banana salad

ஆரோக்கியத்தினை அள்ளித் தரும் கிவி – வாழைப்பழ சாலட் ஆரோக்கியத்தினை அள்ளித் தரும் கிவி – வாழைப்பழ சாலட் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 2 voted )

Ingredients

  • வாழைப்பழம் – 1
  • கிவி பழம் - 2
  • சின்ன வெங்காயம் - 6
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  • தேன் - 1 டீஸ்பூன்
  • புதினா - சிறிதளவு
  • உப்பு - ஒரு சிட்டிகை
  • முந்திரி - 6
  • மிளகு தூள் – தேவைக்கு

Instructions

செய்முறை:

      கிவி மற்றும் வாழைப்பழத்தினை தோலை நீக்கி வட்ட வடிவமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.  சின்ன வெங்காயத்தினை நீளமாக வெட்டிக்கொள்ள வேண்டும்.  புதினா இலைகளை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.  முந்திரியினை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

      ஒரு சுத்தமான பாத்திரத்தினை எடுத்துக் கொண்டு அதில் கிவி, வாழைப்பழம் மற்றும் வெங்காயத்தினை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.  இதனுடன் நறுக்கி வைத்து உள்ள புதினா, தேன், உப்பு எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.  பின் இதனுடன் அரைத்து வைத்து உள்ள முந்திரி பொடியினை சேர்த்து பரிமாறலாம்.

      சூப்பரான சுவையான ஆரோக்கியமான கிவி – வாழைப்பழ சாலட் ரெடி.

 

Related posts

எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பேபி கார்ன் சாலட்

N N

ஆரோக்கியமான பேரீச்சைப் பணியாரம் !!!

TamilTwin India

இஞ்சியின் அற்புதமான நன்மைகள்

TamilTwin