ஜேர்மனியில் ஒரே நாளில் உச்சத்தை தொட்ட பலி

ஜேர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி மாதத்திற்கு பிறகு உச்சத்தை எட்டியுள்ளது.

கொரோனாவின் நான்காவது அலையை தடுக்க நாடு போராடி வருவதற்கு மத்தியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை ஒரு நாளில் ஜேர்மனியில் புதிததாக மொத்தம் 69,601 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 527 ஆக அதிகரித்துள்ளது, பிப்ரவரி மாதத்திற்கு பிறகு ஜேர்மனியில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை இதுவாகும்.

இதன் மூலம் ஜேர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,291,621 ஆக அதிகரித்துள்ளது, பலியானவர்கள் எண்ணிக்கை 1,04,047 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் கடந்த 7 நாளில் 1,00,000 பேருக்கு என்ற கொரோனா விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது, செவ்வாயன்று 432ல் இருந்து 427 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.