fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ்

இந்தியாவின் திரைப்பட நடிகையான கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

      கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் குந்தவை நாச்சியார் கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாகவே பென்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க பல முக்கிய பிரபலங்கள் முயன்று அது கைவிடப்பட்டிருக்கிறது. தற்போது மணிரத்னம் இதை கையில் எடுத்து இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ்

இந்தக் கதையில் முக்கிய கதாபாத்திரமான குந்தவை நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ், மூத்த நடிகை சாவித்ரியின் வாழ்கை வரலாறு படத்தில் சாவித்ரியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலும், நடிகர் நடிகைகள் குறித்த தகவலும் விரைவில் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

அரைகுறை ஆடையில் மாளவிகா மோகன், வைரலாகும் போட்டோக்கள்..!

TamilTwin India

அனுஷ்காவை மேடையில் அழவைத்த இயக்குனர், மேடையில் நடந்த சோகம் !

TamilTwin India

பிருத்விராஜ் படத்தில் மன்னராக நடிக்கும் அக்ஷய்குமார்

N N