மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழுக்கு வந்து மிகுந்த அளவில் வெற்றிப்படங்களைக் கொடுத்து, இளைஞர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ்ப்படங்களில் மட்டும் அல்லாது தெலுங்கிலும் வெற்றிப்படங்களைக் கொடுத்து தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக வலம் வந்த இவருக்கு இப்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஆமாங்க நம்ம கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
ஹிந்தியில் இவர் நடிக்கும் படத்தின் கதை ஒரு கால்பந்து வீரரின் சுயசரிதை ஆகும். மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியக் கால்பந்து அணியை ஆசிய நாடுகளில் முதல் நாடாக அரையிறுதி வரைக் கொண்டு சென்ற கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் என்பவரின் சுயசரிதைதான் படமாக எடுக்கப்படுகிறது.

இவரின் சுயசரிதை படத்தை நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிக்கபூர் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கால்பந்து பயிற்சியாளராக அஜய் தேவ்கன் ஒப்பந்தமாகி உள்ளார். நம்ம கீர்த்திக்கு வெய்ட்டான கதாப்பாத்திரம் என செய்தி வெளியாகியுள்ளது.
சுயசரிதைக்கு பெயர் போன கீர்த்தி வெளுத்துக்கட்டுவார் என்கிறது ரசிகர்களின் ஒரு தரப்பு, பாலிவுட் போன அப்புறம் கோலிவுட்டை மறந்துட மாட்டீங்களே என்கிறது மற்றொரு தரப்பு.