மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் இப்பொழுது முன்னணி கதாநாயகியாக உயர்ந்து இருக்கிறார். தமிழில் “இது என்ன மாயம்” என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக அறிமுகம் ஆனார். இதை தொடர்ந்து விக்ரம் உடன் சாமி 2, விஷால் உடன் சண்டக்கோழி 2, விஜய் உடன் சர்கார், சூர்யா உடன் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

தற்போது பிரபல கால்பந்து வீரரான சையத் அப்துல் ரகீமின் வாழ்க்கையினை கதையாக எடுக்க இருக்கின்றனர். இதில் அஜய் தேவ்கன், ரகீமின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அஜய் தேவ்கன் மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை நடிகர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிப்பது குறித்து கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என கூறி இருக்கிறார். மேலும் இப்படத்தில் நடிப்பதற்கு போனி கபூர் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.