கீர்த்தி சுரேஷ் சினிமாவிற்கு 2000- ம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பிறகு 2013- ம் ஆண்டில் கீதாஞ்சலி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் இரட்டை வேடத்தில் முதன் முதலில் இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட் படமான பதாய் ஹோ வின் இயக்குநர் அமித் ஷர்மா இயக்கும் இந்தப் படத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு இந்தியில் முதல் படமாகும். படத்தின் கதை இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை படமாக உருவாகிறது. இதில் மிக இளவயது தோற்றம் ஒன்றிலும், கொஞ்சம் வயதான தோற்றம் ஒன்றிலும் கீர்த்தி சுரேஷ் இரு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.