Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டிகளை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் தற்போது கிடைக்காத காரணத்தினால் இன்னும் சில முறையே நோயாளர்களைப் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றங்கள் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். உரிய தரப்பினருடன் சுகாதாரத் தரப்பினர் பேச்சுவார்த்தைகள் நடாத்திக் கொண்டிருக்கின்ற போதிலும் இன்னும் சாதகமான தீர்வுகள் எதுவும் பெறப்படவில்லை என ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி ஏற்கனவே எரிபொருள் இன்றி தரிக்கப்பட்டுள்ளது.

எனவே,பொதுமக்களாகிய நீங்கள் நிலைமையினை உணர்ந்து தேவையற்ற வன்முறைச் சம்பவங்களைத் தவிர்த்தும், விஷக் கடிகளிலிருந்து பாதுகாப்பாகவும் இருந்து எதிர்பாராத நோய்களினால் அதி தீவிர சிகிச்சை தேவைப்படுவோரை இடமாற்றம் செய்யும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

(செய்தித் தொகுப்பு:-செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular