fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கார்த்தி – ராஷ்மிகா மந்தானாவின் புதிய படம் பூஜை உடன் துவங்கியது

                கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராஷ்மிகா மந்தானா.  தற்போது இவர் நடிகர் கார்த்திக் உடன் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.  நடிகர் கார்த்தி கைதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.  கைதி படத்தினை மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் இயக்குகிறார்.  இப்படத்தினைத் தொடர்ந்து கார்த்தியும் ராஷ்மிகா மந்தானாவும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றனர்.  இப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜை உடன் இன்று துவங்கப்பட்டது.   

கார்த்தி - ராஷ்மிகா மந்தானாவின் புதிய படம் பூஜை உடன் துவங்கியது

      கார்த்தி – ராஷ்மிகா நடிக்கும் புதிய படமானது எமோசன் மற்றும் ஆக்சன் கலந்த காமெடி கதையாக இப்படம் உருவாக இருக்கிறது.  இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையில் பெரிய பெரிய செட் அமைக்கப்பட்டு உள்ளது.  இப்படம் கார்த்தியின் 19 – வது படம் ஆகும்.  ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகம் ஆகும் முதல் படம் இது ஆகும்.  இரட்டை இசை அமைப்பாளர்களான விவேக் – மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர். 

Related posts

சசிகுமாருக்கு ஜோடியாகும் மிருணாளினி ரவி

N N

சிவகார்த்திகேயனின் ஹீரோ பட புரோமொஷனால் குதூகலமான ரசிகர்கள்!!

N N

கைதி படத்தினை உடனுக்குடன் சூடாக இணையத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்!!

N N