நடிகர் கார்த்திக் தேவ் படத்தினை தொடர்ந்து தற்போது கைதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை மாநகரம் பட இயக்குநர் “லோகேஷ் கனகவேல்” இயக்கி வருகிறார். இப்படத்தின் படபிடிப்புகள் சென்னையில் நடந்து வரும் நிலையில் இப்படத்திற்கு கைதி என தலைப்பு வைத்ததாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு படத்தின் பெயரான கைதி என அச்சிட்டு போஸ்டரை வெளியிட்டு உள்ளனர்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இப்போஸ்டர். கைதி படத்தில் நாயகிகள் யாருக் கிடையாது. ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தினை அடிப்படையாக வைத்து இப்படத்தினை இயக்கி உள்ளனர். 80 சதவிகிதம் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் மீதம் உள்ள படப்பிடிப்பினையும் விரைவாக எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். கைதி படமானது கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.