fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கார்த்தியும் ஜோதிகாவும் ஒன்றாக இணையும் படம்

                நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான படமான தேவ் திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் “கைதி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக பாக்யராஜ் கண்ணன் அவர்கள் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.  இதனை அடுத்து பாபநாசம் படம் இயக்குநர் ஜித்து ஜோசப் உடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.  ஜித்து ஜோசப் தன்னுடைய படத்தின் கதையினை எழுதி முடித்து விட்டதாகவும், சீக்கிரமாக இப்படத்தின் படப்பிடிப்பினை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார்த்தியும் ஜோதிகாவும் ஒன்றாக இணையும் படம்

      இப்படத்தில் நடிகர் கார்த்தியின் அண்ணியும் நடிகையுமான ஜோதிகா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன.  எனினும் இப்படத்தில் கார்த்தி மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் மற்ற கலைஞர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என சொல்கிறார்கள்.  இப்படமானது ஜித்து ஜோசப்பின் வழக்கமான படங்களை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Related posts

விஷாலுக்கு செல்லமே முதல் படம் இல்லையாம், குழப்பத்தில் ரசிகர்கள்!

TamilTwin India

வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த பிரசன்னா!

TamilTwin India

சீரியலில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்

N N