Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்கரணவாய் மூத்த விநாயகர் ஆலயத்தில் இன்று பல்வேறு விசேட நிகழ்வுகள்    

கரணவாய் மூத்த விநாயகர் ஆலயத்தில் இன்று பல்வேறு விசேட நிகழ்வுகள்    

யாழ்.வடமராட்சி கரணவாய் மூத்த விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் எட்டாம் திருவிழாவும் வேட்டைப் பெருவிழாவும் இன்று செவ்வாய்க்கிழமை(09.8.2022) மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டுப் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல்-1 மணியளவில் பிரபல ஈழத்து, இந்திய வித்துவான்களின் தவில்- நாதஸ்வரக் கச்சேரி இடம்பெறும்.

அந்தவகையில், இந்தியாவின் கோயிலூர் கே.ஜி.கல்யாணசுந்தரம், இந்தியா காவாளம் பி.சிறிகுமார், நல்லூர் பாலமுருகன் குழுவினர், கோண்டாவில் பஞ்சமூர்த்தி குமரன் குழுவினர் அளவெட்டி தட்சணாமூர்த்தி- உதயசங்கர் குழுவினர், தாவடி நாகதீபன் குழுவினர் ஆகியோரின்  தவில்- நாதஸ்வரக் கச்சேரி நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல்-4.30 மணியளவில் எம் பெருமானும், பரிவார மூர்த்திகளும் வீதி உலா வரும் திருக்காட்சியும், பிற்பகல்-6 மணியளவில் சக்ஸ போன்’ பிரதர்ஸ் வழங்கும் இன்னிசை வாத்தியங்களின் இசைச் சங்கமம் இடம்பெறும்.

தொடர்ந்து இரவு-7 மணியளவில் எம்பெருமான் காவடிகள், கரகங்கள், பொம்மலாட்டங்கள், புகைக் குண்டுகள் சகிதம் வேட்டைக்குப் புறப்படுதலும், இரவு-8.30 மணியளவில் இரவுநேர உணவு வழங்கல் நிகழ்வும், இரவு-9 மணியளவில் சக்தி சுப்பர் ஸ்ரார் மடோனா, கிரு ஆகியோர் இணைந்து சிறப்பிக்கும் சுகுமார் இசைக் குழுவினரின் இன்னிசை கானங்கள் நிகழ்வும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து முன்னிரவு-11.30 மணியளவில் எம் பெருமானும், பரிவார மூர்த்திகளும் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் காட்சியும் இடம்பெறும்.

இதேவேளை, மேற்படி நிகழ்வுகளில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கரணவாய் மூத்தவிநாயகர் ஆலய மஹோற்சவத்தின் எட்டாம் திருவிழா உபயகாரர்கள் கேட்டுள்ளனர்.                

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)  

RELATED ARTICLES

Most Popular