யாழ்.கந்தர்மடத்தில் அமைந்துள்ள வேதாந்த மடத்தின் வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(15.01.2023) காலை-08 மணியளவில் வேதாந்த மடத்தின் எட்டாவது குருபீடாதிபதி ஸ்ரீவேத வித்யாசாகரர் சுவாமிகள் தலைமையில் பாரம்பரிய முறைப்படி ஆரம்பாகி நடைபெற்றது.

இதன்போது வேதாந்த மடத்தில் அமைந்துள்ள சித்தர்களின் சமாதிக்கு விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.
இதேவேளை, மேற்படி மடத்தில் மிக நீண்ட காலமாகத் தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்று வருவதுடன் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் பாரம்பரிய முறைப்படி இடம்பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)