fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

தமிழிசை போட்டியிட்டால் சந்திக்க நான் தயார்

தூத்துக்குடி தொகுதியில் பாரத ஜனதா சார்பில் தமிழிசை போட்டியிட்டால் சந்திக்க நான் தயாராக உள்ளார் என திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். தி.மு.க. எம்.பி.யும், தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கனிமொழி இன்று பேசும் போது கூறியது, ஸ்டெர்லைட் ஆலையை  எதிர்த்து தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு  நடத்தக் கூடிய மிக மோசமான சூழ்நிலையை நாம் சந்தித்து இருக்கிறோம். தூத்துக்குடியில் பல பிரச்சினைகளால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்.

தமிழிசை போட்டியிட்டால் சந்திக்க நான் தயார்

ஜி.எஸ்.டி. வரியால் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பெண்களும். பல இளைஞர்களும் வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு புதிய தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் உதவிகள் யாரும் செய்வது இல்லை. விவசாயிகளுக்கு உதவி செய்யக்கூடிய வழிகள் பல இருந்தும் அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. கிராமப்புற  மக்களுக்கு  தேவையான அடிப்படை வசதிகள்  கூட இன்னும் செய்து தரவில்லை.  எனவே அங்கு  ஒரு  பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். ஏனெனில் தமிழிசை போட்டியிட்டால் போட்டி கடுமையாக இருக்குமா? என்று அங்கு பார்ப்போம் என்றார் கனிமொழி.

Related posts

நித்தியானந்தா மீது பொலிஸில் புகார் (Video)

World News

ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே 1,000 ரூபா பெற முடியும்

World News

சீமானை நீதிமன்றில் நேரில் ஆஜராக உத்தரவு

World News