Saturday, June 25, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக போதைப் பொருள் பாவனை(Photos)

சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக போதைப் பொருள் பாவனை(Photos)

எமது சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சினையாகப் போதைப்பொருள் பாவனை காணப்படுவதுடன் பல சவால்களுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தடுப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

கிராம மட்டங்களில் சிகரட், மதுசாரம் உட்பட ஏனைய போதைவஸ்துக்குச் செலவாகும் தொகையைக் குறைத்து தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு மக்களை வலுப்படுத்துதல் தொடர்பான செயலமர்வு நேற்று வியாழக்கிழமை(23.6.2022) யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி செயலமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனி மனித முயற்சியினால் போதைப்பொருள் பாவனையினைக் கட்டுப்படுத்த முடியாது. அனைவரும் இணைந்தே போதைவஸ்துப் பாவனையைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

இதேவேளை, சமூகமட்டத்தில் போதைப் பொருளின் தாக்கம், இதனை எவ்வாறு வெற்றி கொள்வது?, போதைப்பொருள் பாவனைக்கு உள்ளானவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு உளமாற்றத்தை ஏற்படுத்தல், சமூக மட்டத்தில் குடும்பம் மற்றும் சமூகத்துடன் இணைத்தல் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular