fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அமெரிக்கா உலகச் செய்திகள் செய்திகள் புலம் முக்கிய செய்திகள்

கமலா ஹாரிஸின் முதன்மை ஆலோசகர் யாழ்.தமிழ்ப் பெண்!

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் முதன்மை ஆலோசகராகவும், தலைமை பணியாளராகவும் செயற்படுபவர் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாக கொண்ட இலங்கை-அமெரிக்கரான ரோஹினி கொசோக்லு என்பவராவார்.

2018 ஆம் ஆண்டில் கமலா ஹாரிஸின் தலைமைப் பணியாளராக யாழ்ப்பாணத்தைப் பின்னணியாகக் கொண்ட ரோஹினி பொறுப்பேற்றார். இருப்பினும், அந்த நேரத்தில் கமலா ஹாரிஸின் தலைமைப் பணியாளராக ரோஹினி நியமிக்கப்பட்ட போது ​​மற்ற ஜனநாயகக் கட்சி சகாக்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர்.

ரோஹினி கொசோக்லுவின் பெற்றோர் வைத்தியர் விஜயதேவேந்திர ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன் ஆகியோர் 1980 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.

ரோஹினி மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். பட்டம் பெற்ற பிறகு ஸ்டீபெனோவின் மூத்த கொள்கை ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் அவர் கொலராடோ செனட்டர் மைக்கேல் பென்னட்டின் கீழ் ஒரு மூத்த சுகாதார ஆலோசகராகப் பணியாற்றினார். அந்த நேரத்தில் ஒபாமா கெயார் திட்டத்திலும் பணியாற்றினார்.

ஏழு ஆண்டுகள் பென்னட்டின் அலுவலகத்தில் பணியாற்றிய ரோஹினி செனட்டர் கமலா ஹாரிஸின் துணைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். மேலும் படிப்படியாக அவரின் தலைமைத் தலைவராகவும், மூத்த ஆலோசகராகவும் உயர்ந்தார்.

Related posts

வீட்டுக்கு வெளியே நின்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

World News

டெல்லி தேர்தல் முடிவுகள்! அதிக இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

World News

மாத்தறையில் ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்யப் பிரஜைக்கு கொரோனா (Photos)

TamilTwin