fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சிம்புவுக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்

தென்னிந்திய திரைப்பட நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் ஹலோ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா திரைக்கு அறிமுகமானவர். இப்பொழுது சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் சிம்பு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பிலும் வெங்கட் பிரபு இயக்கத்திலும்  உருவாக உள்ளது. இந்த படத்திற்கு ராஷி கண்ணா நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது ஆனால் அவர் நடிக்கவில்லை.

சிம்புவுக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்

     பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவர் இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்  நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகவுள்ளார். மாநாடு படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சிம்புக்கு ஜோடியாக நடிக்கிற கல்யாணி அவருக்கு 2 வது படமாகும். தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஒரே நாடு, ஒரே மதத்திற்கு எதிராக போராடும் நேரம் வந்துவிட்டது ! ‘ஆஸ்கர்’ விருது பெற்ற ஜாக்குயின் பீனிக்ஸ் பேச்சு

TamilTwin India

அம்மா மீது இவ்வளவு பாசமா, நடிகை ராதிகாவின் மகள் தனது மகளுக்கு வைத்துள்ள பெயரை பார்த்தீர்களா !

TamilTwin India

தமிழுக்கு திரும்பும் சிரஞ்சீவியின் சொந்தம் நிஹாரிகா!

TamilTwin India