இசை அமைப்பாளர் மற்றும் நடிகர் என பிசியாக இயங்கிக் கொண்டு இருக்கும் ஜி. வி. பிரகாஷ் குமார் தற்போது காதலிக்க யாருமில்லை என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது குப்பத்து ராஜா திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 5 – ம் தேதி ரிலீஸாக இருக்கிறது மற்றும் வாட்ச் மேன் படமும் ஏப்ரல் மாதம் 12 – ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படங்கள் அனைத்தினையும் தொடர்ந்து ஜி. வி. பிரகாஷ் குமார் நடிப்பில் 100% காதல், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், 4 ஜி ஆகிய படங்களும் ரிலீஸிற்கு தயாரான நிலையில் இருக்கிறது.

தற்போது ஜி. வி. பிரகாஷ் குமார், காதலைத் தேடி நித்யா நந்தா, ரெட்டைக் கொம்பு மற்றும் இயக்குநர் கமல் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டும் இருக்கிறார். கமல் இயக்கும் படத்திற்கு காதலிக்க நேரமில்லை என பெயரிட்டு உள்ளனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார்.