
நல்லூர் பிரதேசத்திலும், வட்டாரம் இரண்டிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளின் நிலைமைகளினை நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நல்லூர்த் தொகுதி அமைப்பாளருமான கு.மதுசுதன் இன்று வியாழக்கிழமை(03) நேரடியாக அவதானித்துள்ளார்.

இந்நிலையில் வெள்ள நிலைமை காரணமாக மதியவேளையில் சமைக்க முடியாத பல குடும்பங்களுக்கு சமைத்த மதிய உணவுப் பொதிகளை நேரடியாகச் சென்று மதுசுதன் வழங்கி வைத்துள்ளார்.



{செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி}