fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

அஜித் சொன்ன ஒரு வார்த்தையில் உற்சாகமான ஜிப்ரான்

தமிழ்நாட்டு இசையமைப்பாளரான ஜிப்ரான் 2011ஆம் ஆண்டு வாகை சூட வா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் தல அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தையில் உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளார்.

வாகை சூட வா படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர்
இவர் . அதைத் தொடர்ந்து விஸ்வரூபம், உத்தம வில்லன், பாபநாசம், குட்டிப் புலி, நையாண்டி உள்ளிட்ட பல படங்களுக்கும், மேலும் 800க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ராட்சன் திரைப்படத்தில் இவரது இசை அதிக கவனத்தை பெற்றது.

அஜித் சொன்ன ஒரு வார்த்தையில் உற்சாகமான ஜிப்ரான்

               இந்நிலையில் ஜிப்ரான், நடிகர் அஜித்தை சமீபத்தில் சந்தித்த நிகழ்வு பற்றி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் அதில் அவர் கூறியதாவது,  இது உண்மையான ரசிகனுக்கான தருணம் என்றார், மேலும் எல்லோரும் சொல்வதை விட சிறந்தவராக அஜித் இருக்கிறார். அவர் என்னிடம் நிறைய பேசினார், அதில் நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம் என்று சொன்னது  மட்டும் என் காதில் திரும்ப திரும்ப ஒலிக்கிறது  என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.  அஜித் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் ஜிப்ரான் இந்தப்படத்தில் பணியாற்றலாம் என்றும் கூட தகவல்கல் வெளியாகின்றன.

Related posts

என்னது இவர் ரம்யா பாண்டியனின் சித்தப்பாவா!

TamilTwin India

பாடலாசிரியர் கபிலனுக்கு ஏ.ஆர்.ரகுமான் மனந்திறந்த பாராட்டு

TamilTwin India

‘லிஃப்ட்’ படத்தால் வந்த சோதனை, கடுப்பில் பிரபல நடிகை..!!

TamilTwin India