தமிழ் திரைப்பட நடிகரான ஜீவா. ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். நடிகர் ஜீவா கீ எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் குறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

கீ, கொரில்லா, ஜிப்சி என 3 படங்களில் ஜீவா நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து அடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்சமயம் ஜிப்சி படம் பற்றி அளித்துள்ள ஒரு பேட்டியில் இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
கீ படத்தில் இன்றைக்கு குழந்தைகள் கூட, ஸ்மார்ட் போன் வைத்து விளையாடுகிறார்கள். வெயிலில், மண்ணில் விளையாடிய காலமெல்லாம் போய்விட்டது என்பது பற்றியெல்லாம் படத்தில் சொல்லியிருக்கிறோம் என்றார் மேலும் விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு கதை அமைய வேண்டும் எனக் காத்திருக்கிறேன் என்று ஜீவா தெரிவித்திருக்கிறார்.