fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

பலாப்பழ தேங்காய்ப்பால் ஜீஸ்

பலாப்பழத்தினை சாப்பிட்டு வருவதால் பல நோய்களுக்கு தீர்வு கிடைக்கிறது. பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும். முகம் பொலிவோடு இருக்கும். பலாப்பழம் வாயுத் தொல்லையை நீக்கும். பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் உள்ளது. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.

பலாப்பழ தேங்காய்ப்பால் ஜீஸ்

பலாப்பழத்தின் விதையை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை அரைத்து முகத்தில் தடவினால் ஆறே வாரங்களில் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். பலாப்பழத்தின் விதைக்கு உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. ஆகவே இதன் விதையை சமைத்து சாப்பிட்டு வந்தால், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் சீராக இருந்து, இதனால் தலையில் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். பலாப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து ஜீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பலாப்பழ தேங்காய்ப்பால் ஜீஸ் - Jack fruit coconut juice

பலாப்பழ தேங்காய்ப்பால் ஜீஸ் பலாப்பழ தேங்காய்ப்பால் ஜீஸ் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 50 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பலாப்பழம் - 10
  • தேங்காய்ப் பால் - 1 கப்
  • பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது - 1 ஸ்பூன்
  • தேன் - சுவைக்கேற்ப

Instructions

மிக்சியில் பலாப்பழத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும். அதில் அரைத்த பாதாம், முந்திரிப் பொடியை சேர்த்துக் கலக்கவும். பின் டம்ளரில் ஊற்றிக் குடிக்கலாம். தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

Related posts

செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்யும் பூண்டு ஊறுகாய்!!

N N

சுவையான சேமியா உப்புமா

N N

ஆரோக்கியமான கம்பு கார கொழுக்கட்டை!!

TamilTwin India