fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஜெய் பட நடிகை இப்போது விஜய் படத்தில் நடிக்கிறார்

ஜருகண்டி படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான். விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 என்ற படத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     தமிழ் கதாநாயகர்களுக்கு வில்லனாக நடிக்க இந்தி முன்னணி நடிகர்கள்  சமீபகாலமாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் அடுத்து நடித்து வரும் படத்தில் வில்லனாக இந்தி நடிகர் நடித்துள்ளார். ஆரண்ய காண்டம் என்ற படம் தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் வெளியானது இதில் சிங்கப் பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராப் வில்லனாக நடித்துள்ளார். அவர் மாயவன் படத்திலும் நடித்து இருக்கிறார். இப்போது உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இணைந்து இருக்கிறார் என்று வலைத்தள பக்கத்தில் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

ஜெய் பட நடிகை இப்போது விஜய் படத்தில் நடிக்கிறார்

     ஜெய்க்கு ஜோடியாக நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான் தளபதி 63 என்ற படத்தில் பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகளில் ஒருவராக நடித்துள்ளார். மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து இருக்கிறார்.முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு, டேனியல் பாலாஜி, கதிர் ஆகியோர் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார்.

Related posts

ஒரு போட்டோக்கு இத்தனை கோடியா, இணையத்தில் வெளியான பகீர் தகவல் !

TamilTwin India

நாளை தனுஷ்க்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!!

N N

உடற்பயிற்சி என்ற பெயரில் தலைகீழாக தொங்கும் ரகுல் ப்ரீத் சிங், வைரலாகும் புகைப்படம் !

TamilTwin India