யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புக்கள் பீடத்தில் கல்வியாண்டு 2022/2023 காலப் பகுதியில் சைவசித்தாந்த முதுகலைமாணிக் கற்கைநெறியை மேற்கொள்ளவுள்ள ஏழாம் அணி மாணவர்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை(25.6.2022) பிற்பகல்-3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புக்கள் பீடத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் உயர்ப்பட்டப் படிப்புக்கள் பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் தகைசார் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், பேரவை உறுப்பினர்கள், இணைப்பாளர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(செ.ரவிசாந்)