fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » பிரான்ஸில் அடுத்தடுத்து உயிரிழந்த யாழ் மாணவிகள்!
செய்திகள் பிரான்ஸ் புலம்

பிரான்ஸில் அடுத்தடுத்து உயிரிழந்த யாழ் மாணவிகள்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி-மண்டைதீவுப் பகுதிகளைச் சேர்ந்த செல்லத்துரை (உடையார்) மற்றும் வேலாயுதபிள்ளை (வேவி) ஆகியோரின் பேர்த்தியான கார்த்திகா குலேந்திரா (வயது-22) என்ற, பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி பயிலும் மாணவி இம்மாதம் எட்டாம் ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் மந்துவில் வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த சினேகா சந்திரராசா (வயது-18) என்ற, பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி பயிலும் மாணவி கடந்த பதின்மூன்றாம் திகதியன்று அகால மரணமடைந்துள்ளார்.

இவர் பிரான்ஸ் செவ்ரோன் தமிழ்ச்சோலையின் மாணவி என்பதுடன் சிறந்த கல்வியாற்றல் கொண்ட குறித்த மாணவியின் இம் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு மருத்துவத்துறை மாணவிகளின் அடுத்தடுத்த உயிரிழப்புக்கள் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

யாழில் தொடரும் குடும்ப வன்முறைகள் – கண்ணை மறைக்கும் போதை

SL News

இந்தோனேசியாவில் எண்ணெய் ஆலையில் தீ விபத்து

SL News

கோத்தபாயவின் கைகளுக்கு கிடைக்கவுள்ள முக்கியமான விசாரணை அறிக்கை!

World News