
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள அரச இலக்கிய விழாவை முன்னிட்டு இலக்கியப் பேருரை நிகழ்வு நேற்றுத் திங்கட்கிழமை(24) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் சிறப்புற நடைபெற்றது
இந்நிகழ்வில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் “அளவை அறிவு எனும் பொருளிலும், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா யாழ்ப்பாணத்துப் பண்டிதர் பாரம்பரியம்” எனும் பொருளிலும் சிறப்புப் பேருரைகள் ஆற்றினர்.


இதேவேளை, மேற்படி நிகழ்வு மத்திய கலாசார அலுவல்கள் அமைச்சின் அரச இலக்கிய ஆலோசனைக் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.