Tuesday, August 16, 2022
Homeஆன்மிகம்யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் அலங்கார உற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்(Photos)

யாழ்ப்பாணம் கோட்டை முனீஸ்வரன் அலங்கார உற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்(Photos)

இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் எழிலார்ந்து வீற்றிருக்கும் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் கோட்டை ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா நாளை வியாழக்கிழமை(30.6.2022) மாலை-4 மணிக்கு விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாக உள்ளதாக மேற்படி ஆலயப் பூசகரும், பரிபாலகருமான மா.ஞானசேகரம் ஐயா தெரிவித்துள்ளார்.

நாளை முற்பகல்-10 மணிக்கு 108 சங்காபிஷேகம் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து பிற்பகல்-5.30 மணிக்கு வசந்தமண்டப பூசையும், தொடர்ந்து சுவாமி வீதி உலா வரும் திருக் காட்சியும் இடம்பெறும்.

தொடர்ந்து 28 தினங்கள் இவ்வாலய அலங்கார உற்சவம் நடைபெறும். இவ் ஆலய அலங்கார உற்சவத்தில் எதிர்வரும்-23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-5.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-1008 சங்காபிஷேகமும், மாலை-5.30 மணிக்கு இரத பவனியும், மறுநாள் திங்கட்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்த உற்சவமும் நடைபெறும் எனவும் ஆலயப் பூசகரும், பரிபாலகருமான மா.ஞானசேகரம் ஐயா மேலும் குறிப்பிட்டார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular