இலண்டனில் உதயமானது யாழ்ப்பாணம்! (PHOTOS)

தமிழ் மரபுத் திங்களானது உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இலண்டன் நியூ மால்டனில் நேற்றைய தினம்(22) யாழ்ப்பாணம் மற்றும் கிங்ஸ்டன் இரட்டை நகரங்கள் எனும் பதாகை திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தைப்பொங்கல் விழாவினைக் கொண்டாடும் வகையில் தமிழ்க் கலாசாரங்களைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் இலண்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.