Tuesday, August 16, 2022
HomeEvents-நிகழ்வுகள்யாழ்.மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு(Photos)

யாழ்.மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு(Photos)

யாழ்.மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(04.8.2022) காலை-9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி கலந்துரையாடலில் புகையிரதத் திணைக்களத்தின் பாவனைக்கு உட்படுத்தாத நிலங்களைப் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், பாடசாலைகள், கோயில்கள், தேவாலயங்கள், வீடுகளில் பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுதல், உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் பால், முட்டை என்பவற்றுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள், சிறுபோக மற்றும் பெரும்போக விவசாயத்திற்கான விதைகள், பசளைகள், கிருமிநாசினி ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகள், வங்கிகள் விவசாயிகளுக்குக் கடன் உதவிகளை வழங்குதல், பயிர்ச் செய்கைகளுக்கான எரிபொருள் உடனடித்தேவையை உறுதிப்படுத்தல், விதைநெல் தேவைப்பாடு மற்றும் விதைநெல் விலையைத் தீர்மானித்தல், தென்னைமரத்தைத் தாக்கும் பீடைக் கொல்லி மருந்தின் தட்டுப்பாடு, தென்னம் தொழிற்சாலை உற்பத்திகளை ஊக்குவித்தல், மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, மேற்படி விவசாயக் குழுக் கூட்டத்தில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்டச் சமுர்த்திப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், விவசாயத்துறைசார் திணைக்களத் தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular