
வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பிரதேச செயலகமும், பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை(26) பிற்பகல் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலக்கியம், நாட்டியம், நாடகம், நாட்டுக்கூத்து, மேடையமைப்பு மற்றும் ஒப்பனைத்துறை சார்ந்த எட்டு மூத்த கலைஞர்கள் யாழ்ப்பாணப் பிரதேச கலாசாரப் பேரவையால் ‘யாழ். ரத்னா’ விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் இலக்கியத்துறை சார்ந்து வின்சன் ஜோசப் மற்றும் கந்தன் திருக்குமரன் ஆகியோரும், நாடகத்துறை சார்ந்து அந்தோனிப்பிள்ளை பிலிப் மற்றும் குமாரன் ஐயாத்துரை ஆகியோரும், நாட்டியத் துறை சார்ந்து பாமரப்பிள்ளை வில்சன் உள்ளிட்டோரும் யாழ். பாடி விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

விழாவில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மேற்படி கலைஞர்களுக்கான கெளரவத்தை வழங்கியதுடன் விருதினையும் வழங்கிக் கெளரவித்தார்.

{செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ. ரவிசாந்-}