fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » இதுவரை பிசிஆர் பரிசோதனை செய்யாத யாழ்.நகர வர்த்தகர்களுக்கு இறுதி வாய்ப்பு!
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

இதுவரை பிசிஆர் பரிசோதனை செய்யாத யாழ்.நகர வர்த்தகர்களுக்கு இறுதி வாய்ப்பு!

கொரோனாத் தாக்கத்தின் காரணமாக யாழ்.நகரில் முடக்கப்பட்ட பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள் இதுவரை பிசிஆர் பரிசோதனை செய்யாமலிருந்தால் நாளை சனிக்கிழமை(17.04.2021) காலை-07 மணி முதல் நல்லூர் நாவலர் வீதியிலுள்ள நாவலர் மண்டபத்தில் நடைபெறும் பிசிஆர் பரிசோதனையில் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ்.வணிகர் கழகம் கேட்டுள்ளது.

பிசிஆர் பரிசோதனை செய்யாத எவரும் கடைகளைத் திறந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என சுகாதாரப் பகுதியினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை இடம்பெறும் பிசிஆர் பரிசோதனையே முடக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கான இறுதிப் பரிசோதனை எனவும், சுகாதாரப் பிரிவினர் வர்த்தக நிலையங்களுக்கு கள விஜயம் மேற்கொள்ளும் போது யாராவது பிசிஆர் செய்யாமல் வர்த்தக நிலையங்களில் பணிபுரிந்தால் இதற்கு எதிராகசச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதாகவும் யாழ். வணிகர் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

(செய்தித்தொகுப்பு- எஸ். ரவி)

Related posts

வடமராட்சியில் காவல்துறையினருக்கு தாக்குதல்!

SL News

ஒரு நபரின் செயலால் யாழ்ப்பாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது!

World News

10, 346 மாணவர்களுக்கு 9ஏ

TamilTwin