உக்ரைன் மீது படையெடுக்க ஆயத்தமாகும் ரஷ்யா?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா தயாராகி வருவதாக அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை பிரிட்டன் சப்ளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாடு அதிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் நோக்கில் ஆயுதங்களை கொடுத்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

குறுகிய தூரம் வரை சென்று எதிரிகளை தடுக்கும் ஷார்ட் ரேஞ்ச் ஆண்டி-டேங்க் ஏவுகணைகளை பிரிட்டன் உக்ரைன் வசம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ரஷ்யாவை அச்சுறுத்தும் வகையில் தாங்கள் இதனை செய்யவில்லை என பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா இந்த படையெடுப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருந்தாலும் நேட்டோ – உக்ரைன் தொடர்பான விவகாரத்தில் ரஷ்யாவின் சில கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.