இருபாலை வேளாதோப்பு பாலசுப்பிரமணியருக்கு இன்று கொடியேற்றம்(Photos)

வயல் சூழ்ந்த மண்ணின் நடுவே எழிலுறக் காட்சி தரும் யாழ்.இருபாலை வேளாதோப்பு ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று சனிக்கிழமை(7.5.2022) முற்பகல்-10.23 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-11 ஆம் திகதி புதன்கிழமை இரவு-08 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், எதிர்வரும்-14 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-08 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 16 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் எனவும் மேற்படி ஆலயத் தர்மகர்த்தாக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் காலை உற்சவம் காலை-08.30 மணிக்கும், மாலை உற்சவம் மாலை-05 மணிக்கும் கும்ப பூசையுடன் ஆரம்பமாகவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)