இருபாலை வீரகத்தி விநாயகர் அலங்கார உற்சவம் ஆரம்பம்(Photos)

யாழ்.இருபாலை கிழக்கு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று திங்கட்கிழமை (02.5.2022) பிற்பகல்-03.30 மணியளவில் விசேட அபிஷேகம், பூசையுடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய அலங்கார உற்சவத்தில் 11 ஆம் திருவிழாவான எதிர்வரும்-12 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தினமும் பிற்பகல்-03.30 மணிக்கு அபிஷேகம், விசேட பூசை, மாலை-4.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசை, மாலை-05 மணிக்குச் சுவாமி வீதி உலா என்பன இடம்பெறும்.

12 ஆம் திருவிழாவான எதிர்வரும்- 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-09 மணிக்குச் சங்காபிஷேகம் ஆரம்பமாகி தொடர்ந்து ஏனைய வழிபாடுகள் இடம்பெற்று மதியம் மகேஸ்வர பூசையும் இடம்பெறும். மாலை-04 மணிக்கு வசந்தமண்டப பூசை, திருவூஞ்சல், சுவாமி வீதி உலா என்பன நடைபெறும் என மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவப்பிரம்மஸ்ரீ தா.இரவீந்திரக் குருக்கள் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)