இணுவில் பரராசசேகரப் பிள்ளையாருக்கு நாளை கொடியேற்றம்: ஆலயச் சூழல் விழாக் கோலம்(Photos)

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இணுவில் ஸ்ரீ பரராசசேகரப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை (24.05.2022) நண்பகல்-12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்தும் 11 தினங்கள் இவ்வாலய மஹோற்சவம் நடைபெறும்.

எதிர்வரும்- 25 ஆம் திகதி புதன்கிழமை திருக்கைலாசவாகனத் திருவிழாவும், 26 ஆம் திகதி வியாழக்கிழமை முத்துச் சப்பரத் திருவிழாவும், 28 ஆம் திகதி சனிக்கிழமை மாம்பழத் திருவிழாவும், 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருமஞ்சத் திருவிழாவும், அடுத்தமாதம்-1 ஆம் திகதி புதன்கிழமை இரவு பெரிய சப்பரத் திருவிழாவும், 2 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-5 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-10 மணிக்கு கொடியிறக்க உற்சவமும்
இடம்பெறும்.

இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு ஆலயச் சூழல் தற்போது விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)