கருவி மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு நாளை சனிக்கிழமை (03.12.2022) முற்பகல்-10 மணியளவில் கே.கே. எஸ்.வீதி, தெல்லிப்பழையில் அமைந்துள்ள இராஜேஸ்வரி மண்டபத்தில் மேற்படி நிறுவனத்தின் தலைவர் க.தர்மசேகரம் தலைமையில் இடம்பெற உள்ளது.
மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் சி.சிவன்சுதன் பிரதம விருந்தினராகவும், யாழ்.இராமநாதன் கல்லூரி ஆசிரியை செல்வி.றஞ்சினி விஜயரட்ணம் சிறப்பு விருந்தினராகவும், பருத்தித்துறை சதாவதானி கதிரவேற்பிள்ளை சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கந்தப்பு தங்கராசா, வடமாகாணத் தூரசேவைப் பேருந்துச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி சஜிந்தன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கருவி நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துளளனர்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)