fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

ரூ.33 கோடிக்கு வாக்காளர்கள் கை விரலில் வைக்க அழியாத மை

தலைமை தேர்தல் ஆணையம் நடக்க இருக்கிற பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்காளர்கள் கை விரலில் வைக்க அழியாத மையினை ரூ.33 கோடி செலவில் வாங்கியுள்ளார்கள். தற்போதைய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் செலவும் அதிகமாகி இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ரூ.33 கோடிக்கு வாக்காளர்கள் கை விரலில் வைக்க அழியாத மை

     ஜனநாயகக் கடமையை செய்து முடித்து விட்டதாக உறுதிப்படுத்த வாக்காளர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அடையாளமாக மை வைக்கப்படும். இந்த மையை அழிக்க முடியாது. இந்த மை மூலம் கள்ள ஒட்டு போடும் முயற்சியை தடுக்க முடியும். கடந்த 2014 –ஆம் ஆண்டு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 534 தொகுதிகளில் 21. 5 லட்சம் மை பாட்டில்கள் வாங்கி பயன்படுத்தி உள்ளார்கள். இதை போல் இந்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அதிகமான அழியாத மை பாட்டிகள் வாங்க முடிவு செய்து உள்ளன.

         கடந்த தேர்தலை விட 4.5 லட்சம் மை பாட்டில்கள் அதிகமாகும். இந்த மை பாட்டில்கள் வாங்குவதற்கு ரூ.33 கோடி தலைமை தேர்தல் ஆணையம் செலவு செய்துள்ளது. இந்த மை 7 கட்ட தேர்தலின் போதும் சுமார் 90 கோடி வாக்காளர்களின் கை விரல்களில் வைக்கப்பட இருக்கிறது

Related posts

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது

N N

வளைகுடா போர் பதற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

World News

இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்: வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்

World News