Saturday, June 25, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்மாற்றுத் திறனாளி சிறுவனை விமானத்தில் ஏற மறுத்த இண்டிகோ.. .5 லட்சம் அபராதம் விதிப்பு!

மாற்றுத் திறனாளி சிறுவனை விமானத்தில் ஏற மறுத்த இண்டிகோ.. .5 லட்சம் அபராதம் விதிப்பு!


ராஞ்சியில் இருந்து ஐதராபாத் செல்லும் விமானத்தில் மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்படாதது பலரின் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது

அதாவது ராஞ்சியில் இருந்து ஐதராபாத் செல்வதற்கு சிறுவன் ஒருவன் இண்டிகோ விமானத்தில் செல்ல கடந்த 9 ஆம் தேதி காத்திருந்துள்ளான்.

அதாவது சிறுவன் அச்சத்தில் இருந்ததால்தான் விமானத்தில் ஏற்றவில்லை என்றும் இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோரும் விமானத்திற்குள் நுழைய வேண்டாம் என முடிவு செய்ததாக இண்டிகோ நிறுவனம் தன்னுடைய பக்கத்தில் நடந்ததைக் கூறியது.

இந்த செய்தி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியதுடன் பலரின் கண்டனத்திற்கும் ஆளானது. இந்தநிலையில் இதுகுறித்து டிஜிசிஏ விசாரணை நடத்தியது. 

விசாரணை முடிவில், “இண்டிகோ ஊழியர்கள் சிறப்புக் குழந்தையைக் கையாள தவறிவிட்டனர்.

குழந்தையை அமைதிப்படுத்தி அதன்பின்னர் அடுத்து நடக்க வேண்டியது குறித்து முடிவு எடுத்திருக்கலாம்.

விமானத்தின் ஊழியர்கள் சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு செயல்பட்டு இருக்க வேண்டும், ஆனால் சரியாகச் செயல்பட தவறிவிட்டனர்.

சிறுவனுக்கும் அவரது பெற்றோருக்கும் ஏற்பட்ட மோசமான நிலைமையினை சமாளிக்க விமான விதிகளின் கீழ் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளோம்” என்று கூறியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular