இந்தியா ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, இத்தாலி, ஃப்ரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
1975 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் செயற்கைக்கோளை அனுப்பி சாதனை செய்தது.
விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் பெண் என்ற சாதனையை கல்பனா சாவ்லா செய்தார். அதனைத் தொடர்ந்து அந்த வெற்றிப் பயணத்தில் சிரிஷா சுனிதா வில்லியம்ஸ் இணைந்தார்.
அந்தவகையில் தற்போது ஆந்திரமாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
அதாவது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் வசிப்பவர்தான் சிரிஷா பண்ட்லா, இவருக்கு வயது 34.
அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சா வழியைச் சார்ந்த சிரிஷா பிரிட்டனின் கோடீஸ்வரர்களில் ஒருவரான சர் ரிச்சர்ட் பிரான்சலுடன் விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் விமானத்தில், விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிரிஷா பண்ட்லாவின் இந்தப் பயணம் குறித்து இந்திய மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் சிரிஷாவின் விண்வெளிப் பயணம் குறித்து இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.