வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களின் கனவினை நிறைவேற்றும் வகையில் அட்வென்ஞ்சர்ஸ் என்ற நிறுவனம் சிறப்பான பேருந்து சேவையினை செயல்படுத்தி வருகின்றது.
தரை விமானம் என்றே இதனை சொல்லலாம் என்பதுபோல் உள்ளது இந்த பேருந்தின் வசதிகள்.
உலகின் நீண்ட தூரம் பயணம் செய்யும் பேருந்து சேவையாக இந்த பேருந்து சேவையே இருப்பதாகக் கூறப்படுகின்றது.
ஹரியானா மாநிலம் குருகிராமைச் சார்ந்த நிறுவனம் தான் அட்வென்சர்ஸ் ஓவர்லேண்ட்.
இந்த விமான சேவையானது மியான்மர், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் லண்டனுக்கு இயக்கப்படுகின்றது.
இந்தியாவின் மணிப்பூரில் துவங்கி சிங்கப்பூர் வரையிலான பேருந்து சேவையினை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துவக்கியது.
இந்தியா- லண்டன் செல்ல 18 நாடுகள் வழியாக பயணிக்கிறதாம். மொத்தமாக 2.5 மாதங்கள் வரை பயண காலமாக உள்ளதாம்.
நீண்ட தூரம் பயணிக்க நினைப்பவர்களுக்காகவே இந்த சேவை துவங்கப்பட்டதாக பயணிப் பிரியர்கள் கூறுகின்றனர்.
விமானத்தில் உள்ளதுபோன்ற அனைத்து வசதிகளும் குறைவில்லாமல் செய்யப்பட்டுள்ளதால் உட்கார்ந்து செல்வது குறித்து உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படாதவாறு தவிர்க்கப்படுகின்றது.